ராமாயணம் – RAMAYANAM
₹270.00
*கண்ணனும், பார்த்தனும், சீதையும், அநுமனும், பரதனும் பூஜைக்கு உரிய மூர்த்திகள்; வெறும் கதாபாத்திரங்கள் அல்ல. பெரியோர்களையும், வீர புருஷர்களையும் பார்த்து அவர்களைப் பின்பற்றுவது ஒரு விதம். கதைகளைப் படித்து அந்தக் கதாபாத்திரங்களைப் பின்பற்றுவது மற்றொரு விதம். பரதனையும் சீதையையும் பீமனையும் பின்பற்றுவது உயிர் கொண்ட நம் முன்னோர்களைப் பின்பற்றுவது போல். – மீ. ப. சோமசுந்தரம்.
தலைமுறை தலைமுறையாக நம் மக்கள் படித்தும், கேட்டும்,அனுபவித்தும் மனத்தூய்மை பெற்று வந்த பேரதிகாசம் இராமாயணம்.
‘அநீதி, அக்கிரமம், கொடுமை ஆகியவற்றையொழித்து அறமும்,நலமும்,இன்பமும் பெறுக ஆண்டவன் அருள் பாலிப்பான்’ என்ற தத்துவ உண்மையை இது விளக்குகிறது.
பண்புகள் மேலோங்கிய இக்காவியத்தின் குணச்சித்திரப் பாத்திரங்கள், நம்மைத் தீய நெறியினின்றும் விலக்கி, நாம் சீரும் சிறப்புமிக்க வாழ்வைப் பெற வழிகாட்டிகளாக உள்ளன.
எனவேதான் இக்காவியம் நமது பழமைச் செல்வமாகவும், பண்பாட்டின் களஞ்சியமாகவும், நெறிகாட்டும் கலங்கரை விளக்காகவும் ஆன்றோரால் போற்றப்பட்டு வந்தது. கால முகில்களை விலக்கி, தண்ணொளி பரப்பும் வெண்மதியாக இந்நூல் விளங்குகின்றது.
நமது மதிப்பிற்குரிய பெருந்தலைவர், நம் நாட்டுப் பண்பாடுகளில் முற்றும் தோய்ந்த ஞான அருளாளர் ராஜாஜி அவர்கள், இந்நூலைச் சாதாரண மக்களும் பெண்களும் சிறுவர்களுங் கூடப் படித்துப் பயன்பெறத் தக்க முறையில் எளிய இனிய வாசகத் தமிழில் வழங்கியுள்ளார்கள்.
ராஜாஜி (ஆசிரியர்)
பக்கங்கள் :600
விலை:270 /-
Related products
கந்தரநுபூதி
கந்தர் அநுபூதி-Kandhar Anubuthi
நூலின் சிறப்பம்சங்கள்
- அருணகிரிநாதர் அருளிய புகழ்பெற்ற முருக பக்தி நூல்
- 51 ஆன்மிகப் பாடல்களைக் கொண்டது
- தினசரி பாராயணத்திற்கு ஏற்றது
- சைவ சித்தாந்த மற்றும் ஞானக் கருத்துகள் நிறைந்தது
- பக்தி மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்கான வழிகாட்டி
- தமிழ் சமய இலக்கியத்தின் சிறந்த படைப்பு
- முருக பக்தர்களின் அவசியமான நூல்
Key Features
- Sacred Murugan devotional classic
- Based on the teachings of Arunagirinathar
- 51 spiritually significant verses
- Ideal for daily parayanam and meditation
- Rich in Tamil spiritual philosophy
- Suitable for devotees and literature enthusiasts
- Promotes self-realization and inner spiritual growth


