கண்மணீயம் -KANMANEEYAM
₹100.00
*இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற கவிஞர் புவியரசுவின் இயற்பெயர் ஜெகநாதன்.
*தமிழ்மொழியைத் தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாக்குவதற்கு நடந்த போராட்டங்களிலும் எல்லைப் போராட்டங்களிலும் ஈடுபட்டுச் சிறை சென்றவர். சிறிதுகாலம் மட்டும் இயங்கிய வானம்பாடி இலக்கிய இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் இவரும் ஒருவர். தனது இலக்கியப் பயணத்தில் 80க்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்துள்ளார். ஷேக்ஸ்பியர், கலில் கிப்ரான், உமர் கயாம், ஓஷோ, தஸ்தவேஸ்கி, ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவரது சில கவிதைகள் ஆங்கிலம், உருசிய, அங்கேரி, சிங்கள மொழிகளிலும் இந்திய மொழிகளான மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது கவிதை புரட்சிக்காரன் 2007-இல் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. இக்கவிதை காஜி நஸ்ருல் இஸ்லாம் எழுதிய தி ரெவலூஷனரி என்ற கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். இவரது கவிதைத் தொகுப்பான கையொப்பம் 2009-இன் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது.
கண்மணீயம் – கவிஞர் புவியரசு
கண்மணீயம் என்பது நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான கவிஞர் புவியரசு அவர்களின் சிறப்பான நூலாகும். மனிதநேயம், காதல், உணர்வுகள், வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் தத்துவச் சிந்தனைகளை ஆழமாக வெளிப்படுத்தும் புவியரசுவின் படைப்புகள், தமிழ் இலக்கிய வாசகர்களிடையே தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளன.
Kanmaniyam – Puviyarasu
Kanmaniyam is a captivating Tamil literary work by renowned poet Puviyarasu, a distinguished voice in modern Tamil literature celebrated for his emotionally rich poetry, philosophical reflections, and humanistic vision. Through his unique poetic expression, Puviyarasu has inspired generations of readers and established himself as one of the most influential contemporary Tamil poets.
